பழுவூர் கோவில் சிலை திருட்டு வழக்கு - மறுவிசாரணை நடத்தி சி.பி.ஐ. வழக்குப்பதிவு
பழுவூர் கோவில் சிலை திருட்டு வழக்கின் விசாரணை முறைகேடு தொடர்பாக மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை,
சர்வதேச கடத்தல் கும்பலோடு சேர்ந்து நெல்லை பழுவூர் சிவன் கோவிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. காதர்பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் காதர்பாட்ஷா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் காரணமாக பழுவூர் கோவில் சிலை திருட்டு வழக்கின் விசாரணை முறைகேடு தொடர்பாக மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story