ரூ.31 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்


ரூ.31 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்
x

ரூ.31 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிட பணியை முனிரத்தினம் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட உளியநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட ரூ.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிய கட்டிடம் கட்டும் பணியின் தொடக்க நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கவுரி வேலாயுதம், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் நந்தகுமார், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன், துணை செயலாளர் சரளா முரளி, மாவட்ட பிரதிநிதி சம்பத், நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர் மாறன், நெமிலி காங்கிரஸ் தலைவர் வேலு, ஊராட்சி செயலாளர் யுவராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story