ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் - மதுரை மாவட்ட கலெக்டர் அதிரடி


x

முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானதால் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை,

நிதி முறைகேடு புகாரில் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் ஷர்மிளா ஜி.மோகன். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றபின் ஊராட்சி நிதியை சொந்த வங்கி கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்ததாக குற்றசாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ரூ.10 லட்சத்து 44 ஆயிரம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நிதி, நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்ட புகாரில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகனை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story