ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். இந்த நிலையில் நேற்று அலுவலகத்திற்கு வந்த அவர் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தும் அறையில் அமர்ந்து கொண்டு தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உள்ளிருப்புப் போராட்டம் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து முறைப்படி நடத்த வேண்டும். வார்டு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும். குடிநீர் குழாய் இணைப்பு, தடுப்பணை கட்டியதில் முறைகேடு உள்ளிட்டவைகளை விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து அதன் துணைத் தலைவரே உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.