ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டப் பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தேவ பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார், முதுகுளத்தூர் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அபூபக்கர், சித்திக் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா கார்த்திக், மேலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கூட்டமைப்பு பொருளாளர் வினோத் வரவேற்றார். இதில் ஊராட்சிகளில் நடைபெற உள்ள திட்டப் பணிகளை குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விளக்கனேந்தல் சண்முகவள்ளி சண்முகம், காத்தாகுளம் இந்திராகாந்தி புயல்நாதன், ஆத்திகுளம் ஆனந்தநாயகி முத்துராமலிங்கம், புளியங்குடி இந்துமதி பாலமுருகன், மைக்கேல்பட்டினம் குழந்தைதேரோஸ் சிங்கராயர், ஆணைசேரி முருகவேல், நல்லூர் தங்கபாண்டியன், கீரனூர் ஜோதி முனியசாமி, சிறுதலை செல்வி காசிநாதன், ஆதனகுறிச்சி லட்சுமி கார்த்திக் ராஜா, பொன்னக்கனேரி சத்யபிரியா சண்முகவேல், ஊராட்சி செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story