ஊராட்சி மன்ற பெண் தலைவர் கிணற்றில் பிணமாக மிதந்த மர்மம்


ஊராட்சி மன்ற பெண் தலைவர் கிணற்றில் பிணமாக மிதந்த மர்மம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே ஊராட்சி மன்ற பெண் தலைவர் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி அருகே ஊராட்சி மன்ற பெண் தலைவர் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

ஊராட்சி தலைவர்

நெமிலியை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் கீழாண்டை தெருவில் வசித்து வருபவர் முருகவேல். இவரது மனைவி மாலதி (வயது 42), ஊராட்சி மன்றதலைவராக பணியாற்றி வந்தார்.

முருகவேல் மது பழக்கத்துக்கு அடிமையளாகி உள்ளார். அவர் குடித்து விட்டு போதையுடன் வீட்டுக்கு வருவதால் அவரை மனைவி மாலதி கேட்கும்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகவேல் வழக்கம்போல் குடித்து விட்டு வீடு திரும்பினார்.

அது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மாலதியின் பிணம் மிதந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நெமிலி போலீசாரிடம் புகார் அளித்தார். அது குறித்து நெமிலி போலீசாருக்கு தெரிவிக்கப்படவே போலீசார் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த மாலதியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனை

முதல்கட்ட விசாரணைக்கு பிறகு உடலை போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவில் உள்ள மர்மம் குறித்து கணவர் முருகவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story