ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்


ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்    ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேற்று ஊராட்சி தலைவர்கள் திரண்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகளிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியை ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஒன்றிய குழு தலைவர் சொக்கலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி தலைவர்களுக்கு பணி வழங்கப்பட்டதால் இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story