ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்


ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம்
x

ஈச்சங்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள ஈச்சங்கால் ஊராட்சிக்கு தனி கட்டிடம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதாபாரி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பிரியதர்ஷினி ஞானவேலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூபாலன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ். ஞானவேலன், தொழிலதிபர் ஆர்.ஆர்.வாசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் அசோகன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story