திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


திருப்புவனம்  ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 2:21 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் சேர்மன் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை சேர்மன் மூர்த்தி முன்னிலை வகித்தார். அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். மன்ற பொருட்கள் குறித்த தீர்மானங்களை மேலாளர் அருணாதேவி வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன் பேசும் போது, அடிக்கடி மின்தடையால் அரசுக்கு அவபெயர் வருகிறது என்றார்.

துணை சேர்மன் மூர்த்தி பேசும் போது ஏனாதி-தேளி ஊராட்சியில் குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன்கள் பதித்து பல வருடங்கள் ஆனதால் சேதமாகி தண்ணீர் சரியாக வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றார்.

சிறப்பு விருந்தினர் மாவட்ட கவுன்சிலர் கருப்பையா பேசும் போது, கிராம பகுதிகளில் டவுன் பஸ்கள் சரியாக வருவதில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வீட்டுக்கு தாமதமாக வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், மின்சாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story