பஞ்சாயத்து துணைத்தலைவி தூக்குப்போட்டு தற்கொலை
குருவிகுளம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
திருவேங்கடம்:
திருவேங்கடத்தை அடுத்துள்ள குருவிகுளம் போலீஸ் சரகம் வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்பாண்டி. இவரது மனைவி சுகந்தி (வயது 40), வாகைக்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவியாக பணியாற்றி வந்தார். சுகந்தி உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று சரியாகி வந்த நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுகந்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story