விழுப்புரம் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில்  3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிப்பு
x

விழுப்புரம் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


உள்ளாட்சி தேர்தல்

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் காரணை ஊராட்சி வார்டு எண்-7, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண்-9, மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் அண்ணமங்கலம் ஊராட்சி வார்டு எண்-5 ஆகிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் கடந்த 9-ந் தேதியன்று நடைபெற்றது.

இதில் காரணை ஊராட்சி வார்டு எண் 7-க்கான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 74.83 சதவீத வாக்குகளும், முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-க்கான தேர்தலில் 62.47 சதவீத வாக்குகளும், அண்ணமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-க்கான தேர்தலில் 66.66 சதவீத வாக்குகளும் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை

இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி காரணை ஊராட்சியில் வார்டு எண் 7-ல் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் எஸ்.சரோஜா என்பவரும், முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் போட்டியிட்ட 3 வேட்பாளர்களில் சு.மகாலட்சுமி என்பவரும், அண்ணமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-ல் போட்டியிட்ட 2 வேட்பாளர்களில் சு.வெங்கடாசலம் என்பவரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட செஞ்சி, மரக்காணம், விக்கிரவாண்டி, முகையூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் வருகிற 15-ந் தேதியன்று பதவியேற்க உள்ளனர்.


Next Story