பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு பட்டியல் சாதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி திங்கட்கிழமை பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு பட்டியல் சாதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நேற்று பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அம்பேத்கர்-பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப் பினர், ஜெய் பீம் தொழிலாளர் நலச்சங்க தலைவர் செண்பகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பகுஜன்சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ், ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்டஇளைஞர் அணி தலைவர் காளிமுத்து, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், கம்யூனிஸ்ட் நகர செயலாளர் சங்கரன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இலவச வீட்டுமனைபட்டா

பாண்டவர் மங்கலத்தில் கடந்த 1998-99-ம் ஆண்டில் 502 பட்டியல் சாதியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்த வேண்டும். மீண்டும் 502 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

உதவி கலெக்டர் உறுதி

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் உதவி கலெக்டர் கா.மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலம் தொடர்பாக, மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவுகள் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story