பெட்ரோல் நிலைய ஊழியர்களை விரட்டிய காட்டெருமையால் பரபரப்பு


பெட்ரோல் நிலைய ஊழியர்களை விரட்டிய காட்டெருமையால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

பெட்ரோல் நிலைய ஊழியர்களை விரட்டிய காட்டெருமையால் பரபரப்பு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் துப்புகுட்டிபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் காட்டெருமை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அதே பகுதியில் இருந்த பெட்ரோல் நிலையத்துக்குள் காட்டெருமை ஓடியது. இதை கண்ட ஊழியர்கள் விரட்ட முயன்றனர். ஆனால் காட்டெருமை மிகவும் ஆவேசத்துடன் அவர்களை தாக்க ஓடி வந்தது. இதனால் ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை காட்டெருமை தொடர்ந்து விரட்டியது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து காட்டெருமை முக்கிய சாலைகள் வழியாக நடந்து வனத்துக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால் மாலை மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் கவனமுடன் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story