46 ஆண்டுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


46 ஆண்டுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

46 ஆண்டுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை

பேரையூர்,

பேரையூரில் உள்ள காந்திஜி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1976-77-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்து முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த சந்திப்பில் 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த காலத்தில் பள்ளியில் நடந்த நிகழ்வுகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் நற்பண்புகளையும், பெருமைகளையும், நினைவுகூர்ந்தனர். மேலும் இந்த மாணவர்களின் தொடர் முயற்சியால் இப்பள்ளியில், பொது நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளது. மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு மேலும் பல்வேறு பயன்களை செய்ய உள்ளதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். 46 ஆண்டுக்கு பிறகு சந்தித்ததால் தங்கள் பழைய நினைவுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

1 More update

Next Story