பங்குனி உத்திர திருவிழா


பங்குனி உத்திர திருவிழா
x

பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வள்ளி-தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வில்லேந்தி வேலவர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். வில்லேந்தி வேலவருக்கு ஷோடச உபசாரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. மாலையில் வள்ளி-தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா காட்சி நடைபெற்றது. பக்தர்கள் வீடுதோறும் தீபாராதனை செய்தனர். பின்னர் கோவிலில் கல்யாண சுப்பிரமணியருக்கு விடையாற்றி வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் பல்வேறு சரண கோஷங்கள் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர். இதேபோல், தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்கார திரு காட்சிகளும் நடைபெற்றன. பல்வேறு கிராம கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story