பங்குனி உத்திர திருவிழா


பங்குனி உத்திர திருவிழா
x

பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 15-ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி திருவிழா நடந்தது. 9 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story