ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது...!


x

சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார்

சென்னை

நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூட்டினார்

சென்னை வேப்பேரி ரிதர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நிர்வாகிகளிடம் கலந்து பேசி ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். இந்த முடிவுகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்க உள்ளார்.

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துடன் உடன் தொண்டர்கள் வந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை கழக நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதால், அவரது ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

வரலாற்று சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி" எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள் என கூறினார்

முன்னதாக சென்னை, அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.


Next Story