பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்


பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:00 AM IST (Updated: 25 Jun 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

கலவை, கூடலூரில் நடந்த பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

கலவை

கலவை, கூடலூரில் நடந்த பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார் திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் பல் சிகிச்சை, கண் சிகிச்சை, சர்க்கரை நோய் ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மணிமாறன், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நிவேதா, ஜி.கே. உலக பள்ளி மேலாண்மை இணை இயக்குனர் வினோத் காந்தி, கலவை தாசில்தார் இந்துமதி, திமிரி ஒன்றியக்குழு துணை தலைவர் ரமேஷ், ஆற்காடு ஏ.வி.சாரதி,

வேம்பி ஊராட்சி மன்ற தலைவர் குமாரி கலைமணி, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ், துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, கலவை பேரூராட்சி செயல் அலுவலர் முத்து, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரஞ்சோதி, சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய்த் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்

சோளிங்கர்

சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் நூ்றாண்டு விழாவையொட்டி பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

முகாமில் பல்வேறு பிரிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இதில் 50 கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் என்னும் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம், 50 பேருக்கு விலையில்லாத மூக்கு கண்ணாடிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், இலவச காப்பீடு திட்ட அட்டை ஆகியவற்றை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

முகாமில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய ஒன்றிய தி.மு.க.செயலாளர் பூர்ணசந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கலா சகாதேவன், ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள், வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் கலந்து கொண்டனர்.


Next Story