பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து - 4 பேருந்துகள் சேதம்


பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து - 4 பேருந்துகள் சேதம்
x
தினத்தந்தி 28 Sept 2023 7:19 AM IST (Updated: 28 Sept 2023 7:21 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேருந்துகள் சேதம் அடைந்தன.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலாவதி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன.

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் 4 பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது. பகல் நேரங்களில் இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்தில் திடீரென தீப்பற்றியது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story