தேசிய கொடியுடன் அணிவகுப்பு
தேசிய பேரிடர் மீட்புப்படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையம் இணைந்து இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம் தோரும் தேசிய கொடி என்ற பெயரில் கையில் தேசிய கொடியுடன் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். தொழிற் பாதுகாப்பு படை கமாண்டன்ட் கவுரவ் தோமர் பேரணியை தொடங்கி வைத்தார். தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மைய அலுவலர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய வளாகத்தில் இருந்து நகரி குப்பம் கிராமம் வழியாக தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகம் வரை கையில் தேசிய கொடியுடன் வீரார்கள் பேரணியாக சென்றனர். பேரணியில் வீரர்கள், கிராம பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.