பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
x

வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்ய சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை கடந்த மாதம் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி மகளிர் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகள் போன்றவை போராட்டம் நடத்தினர்.

சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளது.

வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்ய சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Next Story