காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை
x

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை.

கோவை,

கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் ரங்கநாதன். நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மகள் மதுமதி (வயது 27). எம்.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் மதுமதியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதுமதி, பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பினார். பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் மதுமதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு மதுமதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story