பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகை


பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகை
x

நெல்லை டவுனில் பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை டவுனில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் இடம் தொடர்பாக நிர்வாகிக்கும், பள்ளிவாசலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளிவாசலுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதை அமல்படுத்தும் வகையில் நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தை கைப்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் அங்கு வந்து திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் முகமது களந்தர் கூறுகையில், "பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பள்ளிவாசலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. தற்போது மாணவர்கள் நலன் கருதி அந்த பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றி செயல்படுத்தலாம். இல்லை என்றால் பள்ளிவாசல் நிர்வாகமே அந்த பள்ளியை அதே இடத்தில் தொடர்ந்து செயல்படுத்த தயாராக உள்ளது'' என்றார்.


Next Story