பேரம்பாக்கத்தில் பள்ளி அருகே ரேஷன் கடை கட்ட பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்ப்பு


பேரம்பாக்கத்தில் பள்ளி அருகே ரேஷன் கடை கட்ட பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்ப்பு
x

பேரம்பாக்கத்தில் பள்ளி அருகே ரேஷன் கடை கட்ட பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

பள்ளி அருகே ரேஷன் கடை

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 319 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்ட முடிவு செய்யப்பட்டு, ரேஷன் கடை கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி அருகே ரேஷன் கடை கட்டுவதால் கூட்ட நெரிசல் மற்றும் இறைச்சல் உள்பட பல்வேறு இடையுறுகள் மாணவர்களுக்கு ஏற்படும் என கூறி கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

வகுப்பை புறக்கணித்து போராட்டம்

இந்த நிலையில் நேற்று பள்ளி அருகே ரேஷன் கடை கட்டுவதற்காக கட்டுமான பணிகள் தொடங்கியது. இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து பள்ளியில் இருந்த தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளி அருகே மாணவர்களுக்கு இடையூறாக ரேஷன் கடையை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றொருடன் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுப்பற்றி தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் கவிதா, ஆசிரியர் பயிற்றுனர் மகாலட்சுமி மற்றும் மப்பேடு போலீசார், பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ரேசன் கடை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தினர். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.


Next Story