பரிமள ரங்கநாதர் கோவிலில் சமபந்தி விருந்து


பரிமள ரங்கநாதர் கோவிலில் சமபந்தி விருந்து
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் சமபந்தி விருந்து வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, பஞ்ச அரங்கதலங்களில் பிரசித்தி பெற்ற திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தினை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்து உணவு அருந்தினார். இதில் நகரசபை தலைவர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து உண்டனர்.


Next Story