மாநகராட்சி பூங்காவில் குவிந்த மக்கள்


மாநகராட்சி பூங்காவில் குவிந்த மக்கள்
x

விடுமுறை நாளையொட்டி மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்

திருப்பூர்


விடுமுறை நாளையொட்டி மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்

தொழில் நகரமான திருப்பூரில் சினிமா தியேட்டர்களை தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதை கழிக்க பொதுமக்கள் படாதபாடுபடுகிறார்கள். செலவும் குறைவாக இருக்க வேண்டும், சந்தோஷமாக ெபாழுது போக வேண்டும் என்று ஆசையில் அவர்கள் வருவது மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா மட்டுமே. இந்த பூங்காவில் விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் பொழுதை கழிக்க மக்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு நேற்று காலை முதலே பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து உள்ளே சென்றனர். பனியன் நிறுவனங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வடதொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். குழந்தைகள் ஊஞ்சல், சீசா, தண்ணீர் படகு, ராட்டினம் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சுதந்திர தினம் மற்றும் கூட்ட நொிசலை ஒழுங்குபடுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story