பர்கூர் எலச்சிபாளையம் கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது
வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு
ஈரோடு
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்தவர் சிவம்மாள் (வயது 50). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் சமையல் செய்யும் இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி பர்கூர் வனத்துறையினரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் நாகப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பிடிப்பட்ட நாகப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர்.
Related Tags :
Next Story