பகுதி நேர புதிய ரேஷன் கடை

திட்டக்குடி அருகே பகுதி நேர புதிய ரேஷன் கடை அமைச்சர் சி.வெ.கணேசன் அடிகல் நாட்டினார்
திட்டக்குடி
திட்டக்குடியை அடுத்துள்ள இறையூர் கிராமத்தில் பகுதி நேர புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் எஸ்.மா.கந்தசாமி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சுதாரத்தினசபாபதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வமணிகந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறும்போது, பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் கட்டி விரைவில் திறக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செம்மையன், நகர செயலாளர் குமரவேல், திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், கூட்டுறவு வங்கி செயலாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், பெலாந்துறை காமராஜ், வி.சி.க. திட்டக்குடி தொகுதி துணை செயலாளர் வேந்தன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் செம்மல், மாவட்ட துணை அமைப்பாளர் சேகர், பெண்ணாடம் நகர செயலாளர் ஆற்றலரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்






