பகுதி நேர ரேஷன் கடை


பகுதி நேர ரேஷன் கடை
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜி.அரியூரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் எம்.ராஜேந்திரன், எஸ்.அய்யனார், வி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் தனம்சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்./


Next Story