ரிஷிவந்தியம் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா.


ரிஷிவந்தியம் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா.
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 AM GMT)

ரிஷிவந்தியம் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே மேலப்பழங்கூர் காலனியில் பொதுமக்கள் நலன் கருதி பகுதி நேர ரேஷன் கடை புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமைதாங்கி, பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சுரேஷ், சார் பதிவாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கோவிந்தராஜூ, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story