பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன


பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன
x

பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்


பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

திறப்பு விழா

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் கூட்டுறவு துறை மூலம் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இந்த கடையினை திறந்து வைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியதுடன் 3 பயனாளிகளுக்கு இலவச சலவைப்பெட்டிகளையும் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் வசதிக்காக அவர்களது கோரிக்கை அடிப்படையில் ரேஷன் கடைகளையும், பகுதி நேர ரேஷன் கடைகளையும் திறந்து வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் 995 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ரேஷன் கடை

அதில் 725 முழுநேர ரேஷன் கடைகளும், 270 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் 65 நடமாடும் ரேஷன் கடைகளும் உள்ளன. மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களது வசதிக்காக புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் குலக்கரை பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில் இங்கே பகுதிநேர ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கடையின் மூலம் 310 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை யூனியன் தலைவர் சசிகலா, சூலக்கரை பஞ்சாயத்து தலைவர் புஷ்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story