பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நேற்று தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பி.தமிழரசு தலைமை தாங்கினார்.

சென்னையில் போராடிய பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்ததை கண்டித்தும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதி எண் 181-ஐ உடனடியாக நிறைவேற்றக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் துணைத்தலைவர்கள் கமலகண்ணன், அருண்பாஸ்கர்ராஜ், துணைச்செயலாளர்கள் குருசாமி, இம்மானுவேல், மாவட்ட ஆலோசகர்கள் கந்தசாமி, சீதாராமன், அமைப்பாளர்கள் இளமதி, குப்புசாமி, மகளிர் அமைப்பாளர்கள் வளர்மதி, தனலட்சுமி மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story