ஓபிஎஸ் ஊரில் ஈபிஸ் - அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பு


ஓபிஎஸ் ஊரில் ஈபிஸ் - அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பு
x

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நேர்மையாக தான் பயணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தேனி,

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, தேனி மாவட்டம் கம்பம் நடராஜன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.

திருமண விழாவில் பங்கேற்கும் வழியில், அன்னஞ்சி புறவழிச்சாலை பிரிவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் 3000 மேற்பட்ட தொண்டர்கள் ஈபிஎஸ்.க்கு வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ஈபிஎஸ்., என் வழி தனி வழி என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நேர்மையாக தான் பயணிப்பதாகவும் கூறினார்.

ஓபிஎஸ் உடன் மோதல் போக்கு உருவான பிறகு, எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக தேனி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story