இட்டமொழி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கை


இட்டமொழி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கை
x

இட்டமொழி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ரிப்பன் வெட்டி பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெ.நம்பித்துரை, கட்சி நிர்வாகி சித்திரைவேல் நாடார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இட்டமொழி வடக்குத்தெரு முத்தாரம்மன் கோவில் மற்றும் புதிய கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதனை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக சுப்பிரமணியபுரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பலியான முன்னாள் வார்டு கவுன்சிலர் மகாராணி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கூந்தன்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் பள்ளத்தில் விழுந்து பலியான மணிராஜ் குடும்பத்தினரை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி வழங்கினார்.


Related Tags :
Next Story