ரூ.12 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை


ரூ.12 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:32+05:30)

திண்டிவனத்தில் ரூ.12 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையை அர்ஜுனன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மரக்காணம் பஸ் நிறுத்துமிடத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணியை அர்ஜுனன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இதேபோல் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட தீர்த்தகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்பட்டது, இதனை அர்ஜுனன் எம்.எல்.ஏ. தலைமையில் திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திண்டிவனம் நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கார்த்திக், சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலு, தேவநாதன், ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் தளபதி ரவி, ஏழுமலை, மலர்சேகர், திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story