நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி - சென்னையில் விமானம் அவரசமாக தரையிறக்கம்


நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி - சென்னையில் விமானம் அவரசமாக தரையிறக்கம்
x

விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

சென்னை,

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த பயணி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் 4 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.




1 More update

Next Story