ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை


ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை
x

திருவாரூர் கேக்கரையில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கேக்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் பிரசித்த பெற்ற குருவி ராமேஸ்வரம் என்னும் சிவன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் அருகில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை பல ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இங்கு பயணிகள் அமருவதற்கான இருக்கை முற்றிலும் உடைந்தும்,கட்டிடத்தின் மேற்பகுதியில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.

புதிதாக கட்ட வேண்டுகோள்

இதனால், இந்த நிழற்குடையின் உள்ளே நின்று பஸ் ஏற பொதுமக்கள் விரும்புவதில்லை. வெளியில் நின்றே பஸ் பிடித்து செல்கின்றனர். சுவரொட்டிகள் ஒட்டப்படும் இடமாக இந்த நிழற்குடை மாறி விட்டது. மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். ஆகவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story