அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 14 May 2023 6:45 PM GMT (Updated: 14 May 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் கோசியப்ப அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சா் ேக.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் கோசியப்ப அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சா் ேக.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார்.

புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரளிக்கோட்டை கிராமத்தில் உள்ள கோசியப்ப அய்யனார் கோவிலில் 2 ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை மாத புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக புரவி செய்ய சில நாட்களுக்கு முன்பு குயவர்களிடம் கிராமத்தின் சார்பில் பிடிமண் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குதிரை பொட்டலில் அரண்மனை புரவி ஒன்றும் மற்றும் காவல் தெய்வங்களுக்கு 4 புரவிகள் என 5 புரவிகள் தயாரானது. அதனைத் தொடர்ந்து கிராமத்தினர் குதிரை பொட்டலில் தயாராக இருந்த புரவிகளுக்கு சிறப்பு பூஜை செய்து புரவிகளை தூக்கிக் கொண்டு நாடக மேடை அருகே புரவி பொட்டலில் வைத்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அமைச்சர் பங்கேற்பு

அதனை தொடர்ந்து புரவி பொட்டலில் இருந்து கோசியப்ப அய்யனார் கோவிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டன. புரவிகளுடன் பக்தர்களின் நேர்த்திக்கடனாக மண்ணால் செய்யப்பட்ட மாடு, குதிரை, பொம்மை ஆகியவை எடுத்துச்சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினா். அதனை தொடர்ந்து இரவு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், சிங்கம்புணரி நகர அவைத்தலைவர் சிவக்குமார், சிங்கம்புணரி நகரச்செயலாளர் கதிர்வேல், ஒன்றிய அவை தலைவர்கள் சின்னையா, மற்றும் ராசு, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணைச்செயலாளர்கள் முத்துக்குமார், சிவபுரிசேகர், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், குடோன் மணி, புகழேந்தி, ஞானி செந்தில், இளைஞர் அணி மனோகரன், சரவணன் பொன்னையா, உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அரளிக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அரளிக்கோட்டை கிராமத்தார் மற்றும் கோசியப்ப இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


Next Story