791 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள்


791 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள்
x
திருப்பூர்


உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 47-வது பட்டமேற்பு விழா நேற்று காலை, கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தலைமை தாங்கி பேசினார். விழாவில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில், 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டு கால பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 581 மாணவ-மாணவிகளுக்கு இளநிலைப் பட்டங்களும், 210 மாணவ-மாணவிகளுக்கு முதுநிலைப் பட்டங்களும் என மொத்தம் 791 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்கலைக்கழகதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் (ரேங்க்) பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி ஆலோசனைப்படி, வேதியியல் துறைத்தலைவர் ம.சிவக்குமார் தலைமையில் பிற துறைப் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.


Next Story