பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன், முனியப்பன், உதிரகாளியம்மன், கன்னிமார், கருப்பராயன் கோவில் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடிக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந் தேதி இரவு முனியப்பன் சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சக்தி கரகம், பூவோடு ஆற்றில் இருந்து எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமிக்கு பூவோடு கையில் ஏந்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
நேற்று காலை 10 மணிக்கு பக்தர்கள் சாமிக்கு மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு சக்தி கரகம் மாற்றி விடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், நாளை(செவ்வாய்க்கிழமை) காலை அன்னதானமும், இரவு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.