புள்ளிமான் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா


புள்ளிமான் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
x

பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் வேணுகோபால், பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் கருணாநிதி, ஓய்வு பெற்ற துணை அஞ்சல் துறை அதிகாரி செல்வராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை சார் ஆய்வாளர்கள் தங்கப்பா, எழில் மற்றும் கிளமெண்ட் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் தேவிகா பேபி வரவேற்று பேசினார். லட்சுமிதேவி கல்வி குழும தலைவர் அனுகிரஹா, நிர்வாகிகள் டாக்டர் பொன்னு லட்சுமி, ஆனந்த கண்மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். விழாவில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளின் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில், பள்ளியின் கல்வி நிர்வாகி டாக்டர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


Next Story