பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்


பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் ெரயில்வே கேட், தண்டவாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ெரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ெரயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ெரயில்வே கேட் மூடப்பட்டதால், தென்காசி- நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

அதன்படி தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேரபட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வவிநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து தென்காசிக்கு வழக்கமான சாலையில் சென்றது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றதால் கூடுதலாக 15 நிமிடங்கள் பயண நேரம் பிடித்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


Next Story