கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்


கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
x

கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தில் புதிதாக தனியாருக்கு சொந்தமான சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் தாசில்தார் ராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்த தாசில்தார் ராமன், இது தொடர்பாக மேற்கண்ட ஊராட்சி நிர்வாகம் கிராம மக்களை அழைத்து கூட்டம் நடத்தி அனைவரது கருத்தின் அடிப்படையில் ஒரு முடிவை தெரிவிக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story