ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை


ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன்  அமைதி பேச்சுவார்த்தை
x

முதல்-அமைச்சர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் 3 மற்றும் 7-வார்டு பகுதிகளான சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர், அம்பேத்கர் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, பழனிச்சாமி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,500 குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்து வருவதாக கூறி, பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வருகிற 21-ந்் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் வரும்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனையொட்டி திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் சப்-கலெக்டர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சிவப்பிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், சதீஷ்குமார், பா.ஜ.க. பொதுச் செயலாளர் கண்ணன், உள்பட அப்பகுதி கட்சிப் பிரமுகர்கள், கலந்துகொண்டனர். அவர்கள் அதே பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும், அதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அங்கு வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்ட பின்னர் தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடத்தில் மனு அளிக்க ஏற்பாடு செய்து தரப்படும், ஆகையால் யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.


Related Tags :
Next Story