மின்சாரம் தாக்கி மயில் சாவு


மின்சாரம் தாக்கி மயில் சாவு
x

மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

ஈரோடு

ஈரோடு தென்றல் நகரில் நேற்று காலை மயில் ஒன்று பறந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் மயில் மோதியது. இதனால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஈரோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த மயிலின் உடலை மீட்டு, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறும்போது, 'இறந்தது ஆண் மயில் என்றும், பிரேத பரிசோதனை முடிந்ததும் உரிய முறைப்படி மயில் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும்' தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story