மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் விவசாய பயிர்கள் சேதம்

பொங்கலூர்:
பொங்கலூர், பல்லடம் பகுதியில் மயில்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர்களை நாசப்படுத்தும் மயில்கள்
பொங்கலூர் மற்றும் பல்லடம் பகுதி விவசாயத்தைபிரதானமாக கொண்ட பகுதியாகும். குறிப்பாக காய்கறி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மயில்கள் தற்போதுஎண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் மயில்கள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சாகுபடி செய்த பயிர்களை முளைக்கும் தருவாயில் அதனை கொத்தி சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
கட்டுப்படுத்த கோரிக்கை
மயில் தேசிய பறவை என்பதால் அதனை யாரும் தொந்தரவு செய்வது கிடையாது. முன்பு மயில்கள்முட்டையிட்டு வைத்திருப்பதை நரிகள் சென்று உடைத்து குடித்துவிடும்.தற்போது நரிகள் அதிகமாக வேட்டையாடப்பட்டுஉள்ளதால் நரிகளின்எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மயில்கள் இடும் முட்டைகள் அனைத்தும் மயில்களாக குஞ்சு பொரிக்கப்பட்டு மயில்களின் எண்ணிக்கை தற்போது அபரிதமான அளவில் பெருகி வருகிறது.
விவசாய தோட்டங்களில் சுற்றிவந்த மயில்கள்தற்போது வீடுகளை நோக்கியும் படையெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே அரசு இதனை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்