சுருக்கு மடியை பயன்படுத்தி மீன்பிடித்தவர்களுக்கு அபராதம்
சுருக்கு மடியை பயன்படுத்தி மீன்பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
திசையன்விளை:
உவரியில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடியை வைத்து மின் பிடிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மோகன்குமார், உத்திரகாண்டராமன், வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சுருக்கு மடியை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை லாரிகளில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்ல தயார்நிலையில் இருந்தனர். அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மீனவர் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீண்டும் சுருக்குமடியை பயன்படுத்தி மீன்பிடிக்க மாட்டோம் என மீனவர்கள் உறுதியளித்ததின்பேரில் மீன்களை கொண்டு செல்ல அனுமதித்தனர். அந்த மீன்களை கொண்டு சென்ற வாகனங்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் காவல்கிணற்றில் வைத்து அபராதம் விதித்து வசூலித்தனர்.