ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்


ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

கோவை- அவினாசி ரோடு சிக்னல்களில் ஹெல்மெட் அணியா மல் வந்த வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை- அவினாசி ரோடு சிக்னல்களில் ஹெல்மெட் அணியா மல் வந்த வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போலீசார் சோதனை

கோவை- அவினாசி ரோட்டில் மொத்தம் 8 சிக்னல்கள் உள்ளன. அங்கு 4 சந்திப்பு ரோடுகளிலும் நேற்று காலை முதல் மாைல வரை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் அந்த வழியாக ஹெல்மெட் அணியா மல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவர்களை போலீசார் நிறுத்தி அபராதம் விதித்தனர்.

இது குறித்து கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அபராதம்

கோவையில் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அவினாசி ரோட்டில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஹெல்மெட் அணியா மல் இருசக்கர வாகனங்களில் வரும் வாலிபர்கள், கல்லூரி மாண வர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை எடுத்து செல்ல கூடாது என்று பெற்றோர் மூலம் அறிவுரை வழங்கப்படும். ஹெல்மெட் அணியாமல் வரும் சாதாரண தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்காமல் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பப்படுவார்கள்.

வாகனங்கள் பறிமுதல்

அதிவேகமாக வரும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கோர்ட்டு மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் ஒரு சிக்னலில் இருந்து அதிகமாக தப்பி சென்றால், மைக் மூலம் தகவல் கொடுத்து அடுத்த சிக்னலில் அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000, அதிவேகமாக சென்று பிடிபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கோவை- அவினாசி சாலையில் நடந்தது போல் மற்ற சாலைகளிலும் வாகன சோதனை நடத்தப்படும்.

புத்தாண்டையொட்டி ஒவ்வொரு 500 மீட்டருக்கு ஒரு தடுப்புகள் அமைத்து வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். கல்லூரிகள் அருகே ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் வருபவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story