தேன்கனிக்கோட்டையில்காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்


தேன்கனிக்கோட்டையில்காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

வனத்துறையினர் ரோந்து

தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், மயில், யானைகள் அதிக அளவில் உள்ளன. இவை தண்ணீர், உணவு தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக யானைகள் தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் வனவர் தேவநாதன், வனகாப்பாளர் மகாவிஷ்ணு மற்றும் வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பந்தூர் கிராமம் அருகே 2 பேர் காட்டுப்பன்றி கறியை பங்கு போட்டு கொண்டு இருந்தனர்.

2 பேருக்கு அபராதம்

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 60), சதீஷ் (22) என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story