சங்ககிரி அருகே, போக்குவரத்து விதிகளை மீறிய50 கனரக வாகனங்களுக்கு அபராதம்போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
சங்ககிரி
சங்ககிரி அருகே சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போக்குவரத்து வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தக்கூடாது. சாலை போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தினால் அந்த வாகனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட கலெக்டர் ்கார்மேகம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் சங்ககிரி போக்குவரத்து போலீசார் மற்றும் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று முன்தினம் முதல் இரவு பகலாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, போக்கு வரத்து விதிகளை மீறி சாலையோரங்களில் நிறுத்தி இருந்த சுமார் 50 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து சாலை ஓரங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்ககிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தெரிவித்தார்.